"அமைதியான மாநிலமாக விளங்குகிறது தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"அமைதியான மாநிலமாக விளங்குகிறது தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை மாதவரத்தில், ஜெயின் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியா ஒரு திருக்கோயில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு என்று கூறினார். மகான்களின் பாதையான ஆன்மிகம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதையான அரசியல் ஆகிய இரண்டும் சேருமிடம் தான் அறம் என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக திகழ்வதாகவும், மன அமைதிதேடும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழகம் புகலிடமாக அமைத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com