இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பழவேற்காட்டில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற படகு, மற்றொரு படகு மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஏரியில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து
Published on

பழவேற்காட்டில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற படகு, மற்றொரு படகு மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஏரியில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது எதிரே வந்த மற்றொரு படகு மீது சுற்றுலா பயணிகள் வந்த படகு மோதியதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துள்ளது. அதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவதை கண்ட மீனவர்கள் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே மேரி ஜான் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான படகோட்டியை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com