கொடூர கொலைகாரியை ஸ்கூட்டியில் அழைத்து சென்ற போலீஸ்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருமணம் தாண்டிய உறவு காரணமாக கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். காசாங்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இறந்த நிலையில், மனைவி மீது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், ஆண் நண்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததை கண்டித்த பிரகாஷை,

அவரது மனைவி நாகலட்சுமி தனது ஆண் நண்பர் வீரக்குமார் உடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com