சென்னை பெல்ட்டில் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா... யார் யாருக்கு? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

சென்னையை சுற்றியுள்ள, பெல்ட் ஏரியா' எனப்படும் புறநகர் பகுதிகள், பிற மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த வரம்பு தற்போது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாயாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும். அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது; மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல், 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்