சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி

சிலை கடத்தல் வழக்கில் கைதான தலைமை எழுத்தர் ராஜா-வின் மனைவி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி
Published on

சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டு முன்னாள் செயல் அலுவலர், தலைமை எழுத்தர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கு நடந்து வரும் நிலையில், தலைமை எழுத்தராக பணியாற்றிய ராஜா-வின் வீட்டை முன் அறிவிப்பின்றி சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். உடனே வீட்டை காலி செய்ய சொன்னால் எங்கு போவது என்று ராஜா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரது மனைவி அபினேஸ்வரி, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாங்கள் குடும்பத்துடன் சாக வேண்டிய நிலை வந்தால் அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தன் காரணம் என்று ராஜா வேதனையுடன் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com