விடாமல் அலறிய பயணிகள் - தாறுமாறாக மோதிவிட்டு தப்பியோடிய டிரைவர்

x

போதையில் தாறுமாறாக பேருந்து இயக்கம் - பயணிகள் கூச்சல்

கள்ளக்குறிச்சி அருகே மதுப்போதையில் அரசு பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநரால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். பைக் மீது மோதி சாலையின் தடுப்புச் சுவரில் பேருந்து ஏறி இறங்கியதால் பயணிகள் பீதியில் உறைந்தனர். தொடர்ந்து பயணிகள் கூச்சலிட்டதால் அச்சம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் எழிலரசன், மாமந்தூர் பகுதியில் சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த போலீசார், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்