CHENGALPATTU |ACCIDENT செங்கல்பட்டு அருகே நேருக்கு நேர் மோதி கோர விபத்து தீவிர சிகிச்சையில் பயணிகள்
CHENGALPATTU |ACCIDENT செங்கல்பட்டு அருகே நேருக்கு நேர் மோதி கோர விபத்து தீவிர சிகிச்சையில் பயணிகள் #chengalpattu #accident #lorry #govtbus திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி 36 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மகேந்திரா சிட்டியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரை தாண்டி பேருந்தின் முன்பகுதியில் மோதியது. இதில், லாரி ஓட்டுநர் ஆனந்தன், 45, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பேருந்து ஓட்டுநர் சூர்யாவின் கால்கள் சிக்கி படுகாயமடைந்த நிலையில், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.பேருந்தில் பயணித்த 36 பேர் லேசான காயங்களுடன் தனியார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
