தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும் பயணிகளே ரொம்ப உஷார்

x

சென்னை தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் பத்மனாபன். இவர் தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தனது செல்போன் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த சில இளைஞர்கள்,பேக்கை மாட்டிக் கொண்டு, பயணிகளிடம் செல்போன் திருடுவதை கண்டறிந்தனர். இந்த நிலையில், அங்கிருந்த தனிப்படை போலீசார்,திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி, இருவரை பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா மற்றும் ஆக்ஷப் பதான் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மீட்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்