தொழிலதிபரை மணக்கும் நடிகை பார்வதி நாயர்
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக, நடிகை பார்வதி நாயர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித்தை காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் வரும் 6-ஆம் தேதி, திருமணத்திற்கு முந்தைய ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்வுகள் சென்னையில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பு நிகழ்வு, கேரளாவில் நடத்தப்படும் என்றும் பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
Next Story
