மகள் உறவு கொண்ட சிறுமியை பல முறை சீரழித்த கட்சி நிர்வாகி
16வயது சிறுமியை பலாத்காரம் செய்த தேமுதிக நிர்வாகி போக்சோவில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் உறவு கொண்ட 16 வயது சிறுமியை மிரட்டி, பலாத்காரம் செய்த தேமுதிக கட்சி நிர்வாகி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தக்கலை அருகே திக்கணங்கோடு கருக்கன்குழி பகுதியை சேர்ந்த தேமுதிக நிர்வாகி செந்தில்நாகராஜன், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, கணவரால் கைவிடப்பட்ட தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணின் 16 வயது மகள் திடீரென பள்ளி சென்று விட்டு வீடு திரும்பாததால், இது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் அவரது ஆண் நண்பருடன் மீட்கப்பட்ட நிலையில், செந்தில்நாகராஜன் பலமுறை தம்மை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, செந்தில்நாகராஜனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.