Chennai | Sale | குடும்ப கஷ்டத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர் - சென்னையில் பேரதிர்ச்சி

x

சென்னையில் ஆண் குழந்தையை விற்ற பெற்றோர் உள்பட 4 பேர் கைது

சென்னை காசிமேட்டில் பிறந்து 4 மாதங்களே ஆன ஆண் குழந்தையை பணத்துக்காக விற்ற பெற்றோர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காசிமேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சகாயராஜ், திலகவதி தம்பதிக்கு 4-ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது.

குடும்ப கஷ்டம் காரணமாக அந்தக் குழந்தையை பிரதீபா, வெண்ணிலா ஆகிய இடைத்தரகர்கள் வாயிலாக ஈரோட்டில் ஒருவருக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சகாயராஜ் தம்பதி விற்றதாக தெரிகிறது.

இதையறிந்த போலீசார், 4 பேரையம் கைது செய்து குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்