காதலுக்கு பெற்றோர் மறுப்பு - பள்ளி முதல் நாளே மாணவி தற்கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முதல் நாள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 12ம் வகுப்பு மாணவியை, வேலை முடிந்து வந்து பெற்றோர் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். காதலிப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொண்டதாக இதில் தெரியவந்துள்ளது.
Next Story
