சிவனின் சக்தி பெற மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட பெற்றோர்...

சிவனின் சக்தி பெற மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட பெற்றோர்...
சிவனின் சக்தி பெற மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட பெற்றோர்...
Published on

சிவனின் சக்தி பெற மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட பெற்றோர்...

ஈரோடு அருகே, சிவனின் சக்தி பெற மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட புகாரில், தலைமறைவாக இருந்த தாய், தந்தை உட்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம்,

ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, ரஞ்சிதா, இந்துமதி என்ற மனைவிகள் உள்ளனர். இந்த குடும்பத்தாருக்கு, தனலட்சுமி என்ற சசி என்ற பெண் பழக்கமாகி இருக்கிறார். ராமலிங்கம் வீட்டில், ரஞ்சிதா மற்றும் சசி ஆகியோர்,சிவன், சக்தி வேடம் அணிந்து பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சிதாவிற்கு கூடுதல் சக்தி கிடைக்க அவரது மகன்கள், 15 வயதான தீபக் மற்றும் 6-வயதான, கிஷாந்த்தை நரபலி கொடுக்க வேண்டும் என சசி கூறியுள்ளார். இதை காதில் கேட்ட சிறுவர்கள் வீட்டில் இருந்து தப்பிச்சென்று, தனது பாட்டியும், ரஞ்சிதாவின் தாயுமான, பாக்கியம் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து பாக்கியம், ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், கடந்த 12ம் தேதி புகார் அளித்தனர். இதையறிந்த ராமலிங்கம், ரஞ்சிதா உள்ளிட்டோர் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com