வறண்டு போன நிலம் - மனமுடைந்து விவசாயி தற்கொலை

x

விவசாய பண்றதுகாக கடன் வாங்கி போர் போட்டும் நிலத்துல தண்ணி வராத காரணத்தால விவசாயி தற்கொலை செஞ்சிகிட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதில பெரும் சோகத்த ஏற்படுத்தி இருக்கு. உயிரிழந்த விவசாயியோட பேரு பரமசிவம்... இவருக்கு 45 வயசு தான் ஆகுது...இவருக்கு சொந்தமான தோட்டத்துல கிணற்றுபாசனம் மூலமா வாழை விவசாயம் பண்ணி இருக்காரு. ஆனா, கோடை காலங்கள்ல கிணற்றுல தண்ணீர் வற்றி பயிரெல்லாம் கருகி போயிருக்கு.

பரமசிவத்துக்கும் விவசாயத்த விட்டா வேறு பொழப்பு தெரியாது. இதற்கொரு நிரந்தர தீர்வு காணனும்னு நினைச்ச பரமசிவன் கடன உடன வாங்கி 200 அடிக்கு போர் போட்டு இருக்காரு. ஆனா, பாசனத்துக்கு தேவையான தண்ணி கொஞ்சம் கூட கண்ணுல தெரியல...

இதையடுத்து மேலும் 2 லட்சம் கடன் வாங்கி உயர் ரக இயந்திரம் மூலமா நான்கு இடங்கள்ல ஆழமா போர் போட்டு இருக்காரு... நிலத்த எவ்வளவு குடைஞ்சாலும் உள்ள இருந்து தண்ணி மட்டும் வரவே இல்ல...

இதனால இதயமே வற்றிப்போய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பரமசிவன் யாரும் இல்லாத நேரத்துல அவரோட விவசாய நிலத்துலயே விஷம் குடிச்சு தற்கொலை செஞ்சிகிட்டு இறந்து போயிருக்காரு.

தகவல் அறிஞ்சு விரைந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் பரமசிவத்தோட உடலை போஸ் மார்டர்முக்கு அனுப்பி வெச்சிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வராங்க.

முழுமையான விசாரணைக்கு பிறகு தான் பரமசிவனுக்கு வேற எதாச்சும் பிரச்சனை இருந்ததா ? என்பதும் தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்