பரந்தூர் விவகாரம் - ஊராட்சி மன்ற துணை தலைவர் தற்கொலை

பரந்தூர் விவகாரம் - ஊராட்சி மன்ற துணை தலைவர் தற்கொலை
Published on

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்களது நிலங்கள் பறி போகப்போகுதே என்ற கவலையில் 32 வயது பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்துகொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான திவ்யா கணபதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணபதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com