"நான் மனித பிறவி அல்ல; கடவுள்.." மாயக் குரல்கள் கேட்கிறதா..?அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கை மணி

மனச்சிதைவு நோய் என்பது ஒருவரது மனம், எண்ணம், செயல் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுகள் ஆகும். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மற்றும் மரபணு கோளாறுகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும்... சிலர் தனக்குத்தானே பேசிக்கொள்வர், சிலர் யாரைப்பார்த்தாலும் சந்தேகப்படுவர்... மேலும் சிலர் தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்வர். இவ்வாறு, இல்லாத ஒன்றை இருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக நம்புவர். தற்சமயம் கஞ்சா போன்ற போதைப்பழக்கங்களால் இளைஞர்கள் பலர் மனச்சிதைவுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com