இரவில் ஒன்று கூடிய மக்கள்.. கோஷத்தால் அதிர்ந்த பரந்தூர்
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராம மக்கள், 950வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மைதானத்தில் ஒன்று கூடி, விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Next Story
