ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பெருவிழா - வெண்ணெய் தாழி உற்சவம் கோலாகலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலில், பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பெருவிழா - வெண்ணெய் தாழி உற்சவம் கோலாகலம்
Published on

கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தின் போது, வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் வடிவில் ராஜகோபலசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர், ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக எழுந்தருளிய ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணை அடித்து வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com