ஊர் மக்களுடன் தர்ணாவில் குதித்த பஞ்சாயத்து தலைவர்.. திருப்பத்தூரில் சலசலப்பு

x

காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளை கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி கால்வாய்களை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முனுசாமி , வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ அதிகாரிகளை வைத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஊராட்சி தலைவர் முனுசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்