ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம்..! கலெக்டர் அதிரடி உத்தரவு | Thiruvarur

x

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்த கீதா துளசிராமன், விதிகளை மீறி கட்டிட வரைப்படத்திற்கு அனுமதி அளித்து அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படுத்தியதுடன், முறையற்ற தீர்மானங்கள் நிறைவேற்றி, ஊராட்சிக்கு வரவேண்டிய தொகையை காலதாமதமாக செலுத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டார். இதேபோல், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, ஊராட்சி விதிகளை மீறி வரி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், ஊராட்சிக்கு வரவேண்டிய வருவாயை முறையாக ஈட்டாமல் 19 லட்சத்து 42 ஆயிரத்து 171 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுனிதா பாலாயோகியை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்