பல்லாவரத்தை கதிகலங்க வைத்த குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் - ``இதுதான் இங்க பிரச்சனையே..''

பல்லாவரத்தை கதிகலங்க வைத்த குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் - ``இதுதான் இங்க பிரச்சனையே..''

சென்னை பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக கூறப்படும் சம்பவத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கண்டோன்மென்ட் பகுதி, பல்லாவரம் காமராஜ் நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மலைமேடு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் நேற்று இரவு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார்கள். இந்த சூழலில் இதுபோன்ற பாதிப்போடு பல்வேறு மருத்துவமனைக்கு சென்ற வேளையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த சூழலில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருவேதி என்பவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிகப்பட்டது. அதேபோல் மோகனராகவன் என்பவரும் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருமே முந்தையநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வேளையில் உயிரிழந்து இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், உயிரிழந்த மோகன ராகவன் உடல் அவரது வீட்டுக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது உறவினர்கள் அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com