இரவெல்லாம் அரங்கேற்றிய அழிச்சாட்டியம் - ஷாக் தந்த சிசிடிவி... அதிர்ந்த குடியிருப்பு வாசிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் இரவு நேரத்தில் பைக்குகளை ஒருவர் பஞ்சர் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் மனைவியை பிரிந்து வசித்துவரும் செந்தில்குமார், குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் கீழ்தளத்தில் உள்ள பைக்குகளை பஞ்சர் ஆக்கிவிட்டு அவர் சென்றுள்ளார். காலையில் வாகனங்களை எடுத்தபோது குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமார் சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய நிலையில், அவரை போலீசார் எச்சரித்துவிட்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com