Palladam | Viral Video | திமுக நிர்வாகி வீடு தேடி சென்று மிரட்டிய தவெகவினர் - அதிர்ச்சி வீடியோ

திமுக நிர்வாகி வீடு தேடி சென்று மிரட்டிய தவெகவினர் - அதிர்ச்சி வீடியோ

Palladam | Viral Video | திமுக நிர்வாகி வீடு தேடி சென்று மிரட்டிய தவெகவினர் - அதிர்ச்சி வீடியோ பல்லடம் அருகே திமுக நிர்வாகி வீடு தேடி சென்று தவெகவினர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது... திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பாலகிருஷ்ணனிடம் சூலூர் பகுதியை சேர்ந்த தீபா 8 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபா பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில், பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தை நாடி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தீபா தனது ஆதரவாளர்களான தவெகவினருடன் சேர்ந்து பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில், தலைமறைவான தீபா மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com