சேலம் ரவுண்டானா பாலத்தில் பகீர்..ரியல் எஸ்டேட் அதிபரை வழிமறித்த 3 கார்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தொழில் நிமித்தமாக, தனது காரில் ஓசூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சேலம் ஏவி ரவுண்டானா பாலம் அருகே, 3 கார்களில் வந்த மர்மநபர்கள் காரை வழிமறித்து மூர்த்தியை தாக்கியதுடன், காரில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com