பல்லடம் படுகொலை சம்பவம்.. குற்றவாளி சுற்றிவளைத்த போலீஸ்

பல்லடம் படுகொலை சம்பவம் - முக்கிய குற்றவாளி என கருதப்படும் வெங்கடேசனை நெருங்கிய தனிப்படை போலீசார்

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வெங்கடேசனை இன்று இரவுக்குள் கைது செய்ய போலீசார் திட்டம்.

செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியே நெருங்கிய போலீசார்.

முக்கிய குற்றவாளியாக வெங்கடேசன் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் , இன்று இரவில் அவனை சுற்றி வளைக்க போலீசார் திட்டம்.

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பத்தல்மேடு பகுதியே சேர்ந்த ஐயப்பனின் மகன் வெங்கடேசன் என்பவர் பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி

வெங்கடேசன் மீது கொலை முயற்சி வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெங்கடேசன் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com