பல்லடம் வங்கி கொள்ளை வழக்கு - டெல்லி விமானநிலையத்தில் ஒருவர் கைது

பல்லடம் வங்கி கொள்ளை தொடர்பாக டெல்லியில் கைதான நபரை திருப்பூர் அழைத்து தர தனிப்படை போலீசார் தலைநகருக்கு விரைந்துள்ளனர்.
பல்லடம் வங்கி கொள்ளை வழக்கு - டெல்லி விமானநிலையத்தில் ஒருவர் கைது
Published on

வே.கள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த 21ஆம் தேதி 18 லட்சம் பணம், 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக, டெல்லி விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் எஸ்பிஐ வங்கியில் கொள்ளை அடித்தது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது, கைதான நபர் பல்லடம் வங்கியையும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி போலீஸ், திருப்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து, அந்த நபரை திருப்பூர் அழைத்து வர, இரண்டு தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com