Palani | Workers | காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி
பழனி அருகே புஷ்பத்தூர் கிராமத்தில் செயல்படும் தனியார் காகித தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு இரு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூர்அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) ஆகியோர் காகித கூழ் நிரப்பும் பெரிய தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
