Palani | Thaipusam | Murugan Temple | அதிர்ந்த பழனி - களைகட்டிய தைப்பூசம்.. கடலெனத் திரண்ட பக்தர்கள்

அதிர்ந்த பழனி - களைகட்டிய தைப்பூசம்.. கடலெனத் திரண்ட பக்தர்கள்

தைப்பூச திருவிழா - பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் பழனியில் தைப்பூசத்தின் 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணமும், வெள்ளி தேரோட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. தைப்பூசத் தேரோட்டம் நாளை பிப்ரவரி 1 தேதி மாலை 4 .30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் 6ம்நாள் திருவிழாவான இன்று ஏராளமான பக்தர்கள் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி தரிசனம் கோவிலுக்கு தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக மலை கோவிலுக்கு செல்லும் பாதை ஒரு வழிப்பாதை ஆக மாற்றி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு குடமுழக்கு நினைவரங்கம் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு படிப்பாதை வழியாக பக்தர்கள் இறங்கி வர கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கூட்டத்தின் காரணமாக 500 + 500 பக்தர்கள் ஆக பிரித்து காவல் துறையினர் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுப்பி வருகின்றனர். அடிவாரம்கிரிவலப் பாதையில் அரோகரா கோஷங்களுடன் பக்த்ரகள் காவடி எடுத்து ஆடிப்பாடியும், உடலில் அலகு குத்தியவாறு சாமிதரிசனம் செய்துவருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி சரவணப்பொய்கை, சண்முக நதி மற்றும் இடும்பன் குளம் ஆகிய புனித தீர்த்தங்களில் நீராடி சாமிதரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிதாக ஏராளமான 3000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது."

X

Thanthi TV
www.thanthitv.com