Palani Temple | பழனி கோயில் சொத்து விவகாரம் | களத்தில் இறங்கிய புது டீம்
Palani Temple | பழனி கோயில் சொத்து விவகாரம் | களத்தில் இறங்கிய புது டீம்
பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு - அதிகாரிகள் ஆய்வு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து புதிய பிரத்யேக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொன்மணி ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் பழனி தேவஸ்தானத்தில் ஆலோசனை நடத்தினர். கோயில் சொத்துகள், வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் மற்றும் உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து கோயில் சொத்துகளும் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொன்மணி ஐ.ஏ.எஸ்., துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன், கோயில் சொத்துகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
