Palani Temple | Murugan |பிரம்மிக்க வைக்கும் பழனி கோயில்..வரலாற்றில் இதுவரை இல்லாமல் கொட்டிய பண மழை

பழனி முருகன் கோயில் வரலாற்றிலேயே முதன்முறையாக, வருடாந்திர வருவாய் 100 கோடி ரூபாயைத் தாண்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை முதல் 2026 ஜூன் வரையிலான பசலி ஆண்டில், உண்டியல் காணிக்கை, பஞ்சாமிர்த விற்பனை, ரோப் கார் மற்றும் தரிசன கட்டணங்கள் மூலம் 103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது. கடந்த 2020-ல் 15 கோடியாக இருந்த கோயிலின் வருவாய், பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கடந்த 6 ஆண்டுகளில் அசுர வேகத்தில் உயர்ந்து, தற்போது 103 கோடியை எட்டியுள்ளது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த வருவாய் முழுவதும் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அன்னதானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com