

பழனி அருகே 16 வயது மாற்றுதிறனாளி சிறுமியை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்க்காரப்பட்டியை அடுத்துள்ள வேலூரில் 16 வயது மாற்றுத் திறனாளி சிறுமி, தனது தம்பியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கந்தசாமி , குடிபோதையில் வீட்டிற்குள் புகுந்து 16 வயது சிறுமியின் தம்பியை அடித்து விரட்டியதுடன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தம்பி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைக்க, தப்பித்து ஓட முயன்ற முதியவர் கந்தசாமியை அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முதியவரை கைது செய்தனர்.