

பழனி அருகே ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புஷ்பத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள், இந்த ரயில் பாதையை கடந்து தான், பழனி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில், இந்த போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.