Palani Murugan | Thaipoosam | ஜாம்ஜாம்னு முருகனுக்கு நடந்த கல்யாணம்
பழனியில் முருகன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் பழனியில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி, வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.. தைப்பூச திருவிழாவுக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்
