Palani Land Issue | ``உரிமை இல்லை’’ - பழனி நிலத்தை தானமாக வழங்கியவர் வாரிசுதாரர்கள் ஒரே போடு
``அறநிலைய துறைக்கு உரிமை இல்லை’’ - பழனி நிலத்தை தானமாக வழங்கியவர் வாரிசுதாரர்கள் ஒரே போடு
பழனி நிலத்தை தானமாக வழங்கியவரின் வாரிசுதாரர்கள் ஆஜர் பழனி கோயில் நில மோசடி வழக்கில் நிலத்தை தானமாக வழங்கியவரின் வாரிசுதாரர்கள் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது 1882, 1888-ம் ஆண்டுகளின் அசல் ஆவணங்களை குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தனியார் மடத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை, அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறைக்கு அதில் உரிமை இல்லை என்றும் வாரிசுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலம் தொடர்பான உரிமையை நீதிமன்றத்தில் நிரூபித்து, சொத்தை தர்ம காரியத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
