கிரில் சிக்கன்சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த சோகம்.. பழனியில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் காவலபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ப்ரைடு ரைஸ் கடையில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போதே கிரில் சிக்கன் வேகாமல் இருந்ததாக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளனர். இந்த சூழலில், வீட்டிற்கு சென்ற பிறகு அதிகாலையில், ஐந்து பேருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், உடல்நலம் தேறாததால், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இளைஞர்கள் குமுறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com