ஆம்னி கார் மீது ஏறி நின்ற அரசு பேருந்து - உள்ளே இருந்த 5 பேரின் நிலை?.. பகீர் சிசிடிவி
பழனியில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஆம்னி கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். கரூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஆம்னி காரில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது, வேல் ரவுண்டானா அருகே சென்ற கார் மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
Next Story
