பழமுதிர்சோலையில் பக்தர்களுக்கு அபாயம்.. அழகர்கோவில் மலையில் என்ன நடக்கிறது?

மதுரை மாவட்டம், மேலூர், அழகர்கோவில் மலை பகுதியில், கடும் வெயிலின் தாக்கத்தால் போதிய தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் வன விலங்குகள் பெரிதும் தவித்து வருகின்றன. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய பழமுதிர் சோலை முருகன் கோவில், நூபுரகங்கை தீர்த்தம் உள்ள வாகன நிறுத்தம் பகுதிகளில் காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வந்து செல்கின்றன. வனத்துறையினரும், அழகர்கோவில் நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com