``ஜோடிக்கப்பட்ட அரசிதழ்'' - துணைவேந்தர் விவகாரம்-திடீர் திருப்பம் -MHCல் பரபரப்பு வாதம்

x

துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலான வாதம் அனல் பறந்தது.

மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது என திமுக மூத்த வழக்கறிஞரும் எம்பியுமான பி.வில்சன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பில் ஆஜரான அவர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதால், வானம் இடிந்து விழுந்து விடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்த மனுவுடன் இணைக்கப்பட்ட அரசிதழ் ஜோடிக்கப்பட்டது எனவும், அது உண்மையானது இல்லை திமுக வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டார்.

அதேபோல, இந்த அரசிதழ் எப்படி மனதாரருக்கு கிடைத்தது என விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்