கட்டுமான பணியில் உள்ள கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

x

மொட்டை மாடியில் இருந்து சூரிய ஒளிக்காக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது கண்ணாடி உடைந்து முதல் தளத்தில் விழுந்து உயிரிழந்த பரிதாபம்..

ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார்(41) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வானகரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் தங்கி கடந்த ஒரு வாரமாக பெயிண்டிங் வேலை பார்த்து

வந்துள்ளார். இந்த நிலையில் மொட்டை மாடியில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்த

போது மொட்டை மாடியில் சூரிய ஒளிக்காக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது ஏறி வேலை பார்த்தபோது கண்ணாடி உடைந்து விழுந்ததில் பெயிண்டர் மெட்டை மாடியில் இருந்து முதல் தளத்தில் வந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த வானகரம் போலீசார் இறந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் தவறி விழுந்து தான் உயிரிழந்தாரா..! அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் உள்ளதா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூரிய ஒலிக்காக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணாடி உடைந்து பெயிண்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்