குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை பலனின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை பலனின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 49 வயதான தொழில் அதிபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருதுவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி வீட்டுக்கு சென்ற மறுநாளே அவருக்கு கண் வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அவர் மயங்கி விழுந்து உள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யபட்டது. அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில், மேலும் 5 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com