தெய்வானை தாக்கி இறந்த பாகன்.. தந்தை நினைவு நாளில் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
யானை தெய்வானை தாக்கி இறந்த பாகன் - மகள்களின் நெகிழ்ச்சி செயல். திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் உயிரிழந்து ஓராண்டு கடந்ததன் நினைவாக அவரது மகள்கள் அக்ஷரா மற்றும் அகல்யா கோவிலுக்கு சென்று யானைக்கு பழங்கள் மற்றும் கரும்பு துண்டுகளை வழங்கினர். அதை வாங்கி தெய்வானை யானை உற்சாகமாக உண்டு மகிழ்ந்தது. பின்னர் இருவரும் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு நீண்ட நேரம் யானையை தொட்டு நின்றிருந்தது காண்போரை கண்கலங்க செய்தது.
Next Story
