பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்..அரசு சார்பில் மரியாதை | Tamilnadu

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள நூலகத்தில், பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இ -லைப்ரரி (E - LIBRARY) சேவையை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், ஆட்சியர் செந்தில்ராஜூம் தொடங்கி வைத்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com