பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தனி நீதிபதி உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தனி நீதிபதி உத்தரவு
Published on

பச்சையப்பன் கல்லூரி முதல்வராக சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்ரீதர் உள்ளிட்ட 7 பேராசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், முதல்வர் நியமன நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி சேட்டு நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். முதல்வர் தேர்வு நடைமுறை தொடர்பாக மனுதாரர் அளித்த புகார்களை விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சேட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பச்சையப்பன் கல்லூரி, காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் முதல்வரை நியமிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமாரை நியமனம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com