Pa Ranjith | உலுக்கிய மரணம்.. மனம் வெடித்த பா.ரஞ்சித்
Pa Ranjith | உலுக்கிய மரணம்.. மனம் வெடித்த பா.ரஞ்சித்
மானாமதுரை ஆகாஷ் காவல் மரணத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்... சம்பவம் நடந்த 3 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தென் மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், காவல் மரணங்கள் தொடர்வது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அரசு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
