மத்திய அரசின் செயல் வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான ராணுவ தளபதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் செயல் வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்
Published on

ராணுவ ஜெனரல்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்களை வக்காலத்து போடக் கேட்டுக் கொண்ட மத்திய அரசின் செயல் வெட்கக்கேடானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், ராணுவ தளபதி பிபின் ராவத், தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத் அந்த பணியை மட்டும் செய்வது நல்லது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். போரில் எவ்வாறு போரிட வேண்டும் என்றும் சொல்வது அரசியல்வாதிகள் வேலை இல்லை , அதுபோல, அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய வேலை பிபின் ராவத்தோட வேலையில்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நடந்த நிகழ்வுகளை உள்துறை அமைச்சர் மீண்டும் கூர்ந்து நோக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ப.சிதம்பரம், ஒரு கேள்விக்கு கூட அவையில் பதில் அளிக்காத அமித்ஷா, தற்போது அதுகுறித்து விவாதம் நடத்த ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை பொறுத்த மட்டில் எல்லாமே தவறு தான் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com