வாடகைக்காக துப்பாக்கி முனையில் மிரட்டிய ஓனர் தரப்பு - சென்னையில் அதிர்ச்சி

x

வாடகை பாக்கி - துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் கைது

சென்னை கிண்டியில் 3 மாத வாடகை பாக்கிக்காக, ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். கிண்டி - வேளச்சேரி சாலையில் ஹரினி அவென்யூ பகுதியை சேர்ந்த வித்யலதா என்பவர் தனது மாடி வீட்டை சண்முகம் என்பவருக்கு கிளீனிங் நிறுவனம் நடந்த மாதம் ரூ.35,000-க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சண்முகம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், 3 மாதம் வாடகை பாக்கியை வசூலிப்பதற்காக வந்த வித்யலதாவின் உறவினரான, மதுசூதன் என்பவர் அங்கிருந்த மகேந்திரன் உள்ளிட்டோரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சண்முகம் கிண்டி காவல் நிலையத்தில் மதுசூதன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் மதுசூதனிடம் 6 தோட்டாக்களுடன் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்