மாடு முட்டியதால் ஆத்திரம் - சரமாரியாக மாடு மீது தாக்குதல்
நெல்லையில் சாலையில் திரியும் மாடு ஒன்றை முதியவர் உட்பட இரண்டு பேர் கடுமையாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ஒரு முதியவர் உட்பட இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மாடு ஒன்று முதியவரை முட்டியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு பேரும், மாட்டை கடுமையாக தாக்கினர். பின்னர், மாட்டை கீழே தள்ளிவிட்டு அதன் மீது பாறாங்கல்லை தூக்கி போட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
