Perambalur | ``எங்க புள்ள இப்படித்தான் செத்திருக்கும்’’ பகீர் குற்றச்சாட்டு வைக்கும் உறவினர்கள்

x

பெரம்பலூரில் மது போதையில் நண்பர்கள் அடித்து துன்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் தனது நண்பர்களான குபேந்திரன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருடன் மது அருந்திய போது, வினோத்தை நண்பர்கள் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வினோத் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வினோத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்