அமைச்சர் ஒ.எஸ்.மணியனை மறித்து இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ஒ.எஸ்.மணியனை மறித்து இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்
Published on
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வேனில் ஒ.எஸ். மணியன் வாக்கு சேகரித்தார். நீடூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது, அங்கு வந்த இஸ்லாமியர்கள், மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். தங்கள் சார்பில் 20 ஏக்கர் நிலம் வழங்கியும், நடவடிக்கை எடுக்க வில்லை என்ற அவர்கள், மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கவும் அமைச்சர் எதிராக உள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com