ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்

பயிர் காப்பீட்டு நிலுவைத் தொகை விரைவில் வழ​ங்கப்படும் : நெல் கொள்முதல் பணமும் உடனுக்குடன் வழங்கப்படும்
ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்
Published on

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள உம்பளச்சேரி கிராமத்தில், கூரை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் நான்கு கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில்,31 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் இன்று அடிக்கல் நாட்டினார்.மேலும் தகட்டூரில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ஓரிரு நாளில், அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும்,கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை விரைந்த வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com